வாசிப்பு, செய்யுள்


வாசிப்பு 

பின்வரும் வாசிப்பு பகுதியைப் படித்துவிட்டு  உரையாடலில் ஈடுபடுக. 

 இராபிள்ஸ் பேச்சுப் போட்டிக்கு

அனைவருக்கும் என் காலை வணக்கம்.
ஒழுக்கத்தில் எய்துவர் மேன்மை இழுக்கத்தில்
எய்துவர் எய்தாப் பழி.
இது திருக்குறள். இதை ஏன் இன்றைய பேச்சுப் போட்டிக்கு தலைப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நாம் ஆழமாகச் சிந்தித்தால் கிடைக்கும் விடை வேதனைத் தரவல்லது.
ஆமாம் ஒழுக்கம் என்பது கெட்டு, பண்பாடுகளும் மரபுகளும் மறந்த நிலையில் வாழ்ந்து வருகிறோம் இன்றைய மக்கள். ஆங்கிலத்தில் Moral value என்று சொல்லப்படுவதற்கு அடிப்படையே ஒழுக்கம் தானே? அது குறைந்து விட்டதோடு இல்லாத நிலை ஏற்பட என்ன காரணம்?
உணவையே விரைவுணவாக உண்டு கொண்டுள்ள நமக்கு, எங்கே இருக்கிறது நேரம் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க? ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் தொட்டிலிலிருந்து தொடங்கி, சுடுகாடுவரை நிலைபெற வேண்டும் அல்லவா? இதற்கு அடிப்படை இடுவது யார்? முன்னறி தெய்வங்களான  அன்னையும் பிதாவும் அல்லவா? ஆனால் நடப்பது என்ன? பெற்றெடுத்த சிசுவை, வீட்டு வேலைக்காரியிடம்  வீசிவிட்டு, சீவி முடுடிச்சு சிங்காரித்துக் கொண்டு தொழில்மனை நாடி செல்கின்றனர் இன்றைய தாய்மார்கள்? தலாட்டுடன் ஒழுக்கத்தையும் ஊட்ட வேண்டிய தாயும், அறிவை ஊட்ட வேண்டிய தந்தையும் காலை 7 மணிக்கு பை பை சொல்லி கிளம்பினால் இரவு 7 மணிக்குத்தானே  ஆய் சொல்லிக் கொண்டு வீடு திரும்புகிறார்கள்.அந்தப் பிள்ளை ஒழுக்கத்தை எங்கே கற்கும்?அது எப்படி மேன்மை எய்தும்? பாவம் பிள்ளைகள்..பரிதாபத்திற்குரியவர்கள்.
சரி. பள்ளியிருக்கிற ஆசிரியர்கள் ஒழுக்கத்தைக் கற்பித்துவிடுவார்கள் என்று நம்பினால், அவர்களுக்கு SOW பார்த்துப் பாடத்தை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளதே. அவர்கள் எங்கே ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுப்பது? திருத்தவும்,  மன்னிக்கவும் மாணவர்களை அல்ல, புத்தகத்தை. பாடத்தை மணி பார்த்து நடத்தவுமே நேரம் இல்லாத இன்றைய நிலையில் ஒழுக்கம் கற்பிக்கிறேன் என்றால் ஆசிரியர்களைப் பார்த்து தலைமை ஆசிரியர் பாராட்டுவரா?அல்லது அவருக்கு போனஸ்தான் கிடைக்குமா? அல்லது ஓ லெவல் முடிவுகள் சரியாக இருக்குமா?
சரி, அதையும் மீறி வாரம் ஒருமுறை நற்குடிமகன் பாடம் கற்பிக்கலாம் என்றால், மாணவர்களுக்கே புரிகிறது ஆசிரியர் நேரத்தை வீணாக்குகிறார் என்று .அப்புறம் ஒழுக்கம் எப்படி விழுப்பம் தரும்.
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை நரபற்ற வீணைக்குச் சமம். நரம்புகள் இல்லாத வீணையை விறகாகத்தானே பயன்படுத்த முடியும்? அந்த நண்பர்கள் எத்தனை பேர் ஒழுக்கமாக உள்ளனர். சிகரண்டு, மது, மாது, போதை என்று பெரும்பாலான இளைஞர்களும் மாறிவிட காரணம் என்ன ஒழுக்கம் இல்லாத நட்பே ஆகும். உன் நண்பன் யார் என்று சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்றார் ஒருவர். அப்படி இருக்கையில் நண்பர்கள் எப்படி இனியவர்களாக இருப்பார்கள்? நட்பினால் கெட்ட பிள்ளைகளைத்தானே பார்க்க முடிகிறது? நட்பு செய்வதை எல்லாம் நாமும் செய்ய வேண்டும் என்றுதானே உள்ளம் ஏங்கும்? நடை,உடை, பாவனை அனைத்திலும் மேற்கத்திய கலைகளும் பண்பாடும் புகுந்துவிட்டதால் ஒழுக்கம் முஸ்தாபா சென்டரில் விற்கிதா  என்றுதானே கேட்கத் தோன்றும்.
தொலைக்காட்சியில், இணையத்தில், விவேக தொலைப்பேசியில் எப்படி ஐயா ஒழுக்கத்தை சொல்லிக் கொடுப்பது? வசந்தத்தின் பக்கம் போனால், நாற்றம் அல்லவா அடிக்கிறது.ஆட்டம், பாட்டம், கூத்து என்று ஒரு சமுதாயம் வாழத் தொடங்கினால் இறுதியில் அந்த சமுதாயமே மறைந்துவிடும் என்பதை வரலாற்று ஏடுகள் நமக்குக் கற்பிக்கின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ரோமானிய சாமராஜ்யம். அது அழிவுபட காரணமே இந்த ஆட்டமும், பாட்டமும்,சிரிப்பும்புந்தானே? அளவுக்கு மீறி enjoy பண்ண விரும்பும் ஒரு கூட்டமாக மாறாமல் இருக்க ஒழுக்கத்தை அடிப்படையில் கற்பிக்க வேண்டும் அல்லவா? உடனே கல்வியமைச்சு ஆவண செய்யட்டும்.  
முன்பு இருந்ததைப் போல் தாய்மொழியில் சமயக் கல்வி, நற்குடிமகள் கல்வியைத் தேர்வு பாடமாக ஆக்க வேண்டும். ஒழுக்கத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கும் முறையும் வர வேண்டும்.
இன்று பல இடங்களில் ஒழுக்கம் இல்லாத இளைஞர்களைப்  பார்க்கையில் உள்ளம் வேதனை கொள்கிறது.அந்த இளைஞர்களை ஒழுக்கம் உடையவர்களாக மாற்ற சட்டங்கள், சிறைசாலைகள் மட்டும் போதாது. நாட்டுத் தலைவர்கள் பாடுபட வேண்டும்.
நீதிநூல்கள் கற்பிக்கப்பட வேண்டும். இல்லாவிடில் சட்டங்கள் போட்டு மட்டுமே நம்மை அடக்க வேண்டிய பரிதாப நிலை வந்துவிடும். குரங்கை ஆடச் செய்ய குச்சி கையில் இருப்பதைப் போல், நம் மக்களை கட்டுப்படுத்த சட்டங்கள் மட்டும் போதும் என்று கூறலாமா?இதைத்தான் கடந்த மாதம் பிரதரும் குப்பைப் போடக் கூடாது என்று சொல்லி சொல்வியே அலுத்துவிட்டது என்றார். ஆனால் எனதருமைய மக்கள்தான் திருந்தவே இல்லை மன வேதனைப்பட்டார். ஜப்பான் போன்ற நாடுகளை நோக்கினால், அங்கெல்லாம் சிறுவயது முதல் ஒழுக்கத்தை கற்பித்து, அதை வாழ்க்கையில் ஒரு கூறக ஆக்கிவிட்டனர்.
ஆனால் லீ குவான் யூ ஏறபடுத்திய ஒழுக்கம் பண்பாடுகள், இன்று கரையத் தொடங்கிவிட்டன. ரயில்வண்டியில் பயணம் செய்வதுகூட பயமாக உள்ளது எங்கே பாதுகையால் அடித்துவிடுவானோ என்று. தொடில் முதல் ஒழுக்க்க் கல்வி தொடங்கட்டும். அது சுடுகாடுவரை தொடரட்டும்
ஆகவே எனதருமை நண்பர்களே .இனியாவது நமது இளம் சிறார்களை ஒழுக்கத்தின் பால் பற்றுக் கொள்ள வைத்து அதன் பலனை அவர்கள் அறுவடை செய்ய வைப்போம் என்று கூறி விடைபெறுகிறேன்.   

No comments:

Post a Comment